மேல் மாகாண கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல் வெளியானது!

மேல் மாகாண கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல் வெளியானது!

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடடிக்கைகளை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தடுப்பூசியை ஆசிரியர்களுக்கு வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று தேவி பாலிகா, நாலந்தா பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சைக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புடன் சேவையாற்றுகிறார்கள். அதிக நேரம் எடுத்து மாணவர்கள் பரீட்சைக்கு தயார்படுத்தப்படுகிறார்கள்.

மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறித்து பாடசாலை மட்டத்தில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு பாடசாலை நிர்வாக பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் தீர்மானம் வரும் வரை காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாரிய சவால்களை சிறந்த முறையில் வெற்றிக் கொண்டுள்ளோம் என்றார்.

அத்தோடு, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை திறம்பட கையாளும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10 ஆவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

எம்மை விட செல்வந்த நாடுகள் பாரிய பின்னடைவில் உள்ளது. இவ்விடயம் தொடர்பில் எதிர்தரப்பினர் தற்போது கருத்துரைப்பதில்லை. குறுகிய காலத்தில் தற்போதைய நெருக்கடி நிலையை எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

மேலும், கொவிட்-19 தாக்கத்தினால் கல்வித்துறைக்கு இனி பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது என்றார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.