கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படும் முறைமையின் நிலைமை குறித்து தகவல் வெளியானது!

கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படும் முறைமையின் நிலைமை குறித்து தகவல் வெளியானது!

கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தை இலங்கை 2021 மார்ச் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

தடுப்பூசிகள் தொடர்பான பூர்வாங்க தேவைகள் குறித்த பகுப்பாய்வு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


$ads={2}

இதன் அடிப்படையில், தடுப்பூசி பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தடுப்பூசி செயல்முறை மார்ச் மாதம் அறிமுகப்படுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார்.

தற்போது நான்கு கோவிட் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகக் தெரிவித்த அவர், இந்த விடயத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு தற்போது தடுப்பூசிகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் குறித்து செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும் நாட்டில் 50 வீதமானோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இலங்கைக்கு பொருத்தமான தடுப்பூசி மற்றும் இது தொடர்பாக எதிர்கொள்ளும் தளவாட பிரச்சினைகள் குறித்து குழு கவனம் செலுத்துவதாக அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post