
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் உயிருக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
$ads={2}
பிரபாகரன் என்ற பயங்கரவாதியுடன் ஹரின் பெர்னாண்டோ என்ற மனிதாபிமானியை ஒப்பிட வேண்டாம் எனவும் அப்படி செய்வது தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹரின் பெர்னாண்டோவுக்காக தான் மற்றும் முழு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் நிபந்தனையின்றி குரல் கொடுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.