புதிய ஐரோப்பிய செல்வந்த நாடொன்றுடன் இராஜதந்திர உறவுகளை பேண அமைச்சரவை அனுமதி!

புதிய ஐரோப்பிய செல்வந்த நாடொன்றுடன் இராஜதந்திர உறவுகளை பேண அமைச்சரவை அனுமதி!


ஐரோப்பாவின் மிகச் சிறிய நாடாக கருதப்படும் லிச்டென்ஸ்டயின் (Liechtenstein) நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.


ஐரோப்பாவின் நான்காவது சிறிய நாடான லிச்டென்ஸ்டயினின் மொத்த சனத்தொகை 32,000 மாத்திரமே.


160 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நாடு இலவச வரிக் கொள்கையைப் பின்பற்றும் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


பெரும் செல்வந்தர்களின் கொடுக்கல் வாங்கல்களின் இரகசியத்தன்மையையும் தனியுரிமையையும் பாதுகாக்கும் நாடாகவும் லிச்டென்ஸ்டயின் விளங்குகின்றது.


நாட்டின் சனத்தொகையை விட, அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் விசேட அம்சமாகும்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post