நாட்டில் கஞ்சாவை பயிரிட வேண்டும்; புத்த பெருமானே இதை மருந்து பொருளாக ஏற்றுக்கொண்டுள்ளார்! -பெங்கமுவே நாலக்க தேரர்

நாட்டில் கஞ்சாவை பயிரிட வேண்டும்; புத்த பெருமானே இதை மருந்து பொருளாக ஏற்றுக்கொண்டுள்ளார்! -பெங்கமுவே நாலக்க தேரர்


இலங்கையில் மருந்து பொருளாக கஞ்சாவைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


இதற்கு முன்னர், ஆயுள்வேத திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இராஜாங்க அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை தேரர் நேடியாக முன்வைத்திருந்தார்.


$ads={2}


வௌ்ளைக்காரர்கள் அனுமதியின்றி, கஞ்சா பயிரிடவும் பயன்படுத்தவும் முடியாது என்றே தடை விதித்திருந்ததாக நாலக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆனால், 1984ஆம் ஆண்டு எந்தவொரு முறையிலும் கஞ்சாவை பயன்படுத்தக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஏன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என தேரர் கேள்வயெழுப்பியுள்ளார்.


கஞ்சா என்பது மருந்து பொருள் என்றும் புத்த பெருமான் இதை மருந்து பொருளாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஏன் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


எதிர்காலத்தில் இந்த மருந்தை பயன்படுத்தி நோயாளர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


உள்நாட்டு மருந்துக்கு தேவையான கஞ்சாவை பயிரிட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post