கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!


2021ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் நுழையும் மாண வர்களுக்குப் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


அனைத்துப் பாடசாலைகளும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி தரம் 2 முதல் தரம் 13 வரை கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்றைய தினம் (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அத்துடன் முதலாம் தரத்திற்கான புதிய மாணவர்கள் பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.


மேலும், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலுக்குட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post