தற்கொலை முயற்சியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்!

தற்கொலை முயற்சியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்!


கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற கைதியை கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


பூஸா சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை காப்பற்றி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


$ads={2}


இவ்வாறு சிகிச்சை பெற்றுவந்த கைதியே இன்று (16) காலை தப்பிச் சென்றுள்ளார்.


வெலிகம பகுதியைச் சேர்ந்த தப்பிச் சென்ற நபருக்கு எதிராக ஐந்து வருடங்களும் மூன்று மாத காலமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே அவர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேக நபரை கைது செய்வதற்காக காலி பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


-செ.தேன்மொழி


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.