ஈஸ்டர் தாக்குதலுக்கு தொடர்பான தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் விடுவிக்கப்பட்டார்கள்? - காரணத்தை வெளியிட்ட பொலிஸ் மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலுக்கு தொடர்பான தொழிற்சாலை ஊழியர்கள் ஏன் விடுவிக்கப்பட்டார்கள்? - காரணத்தை வெளியிட்ட பொலிஸ் மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலின் போது தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் இன்சாப்பின் வெல்லம்பிட்டிய தொழிற்சாலையில் பணியாற்றிய சந்தேக நபர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு கூடுதல் மாஜிஸ்திரேட் ரஜிந்திரா ஜயசூரிய, வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் 10 ஊழியர்களில் 9 நபர்களை சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்க உத்தரவிட்டார்.


$ads={2}

வெல்லம்பிட்டிய பொலிசார் செப்பு தொழிற்சாலையில் 10 தொழிலாளர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும், அவர்களில் 9 பேரை அவர்கள் கைது செய்த அதே நாளில் விடுவித்ததாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகள் இருந்தபோதிலும் அவர்கள் மீது எந்த தகவலும் வெளிவராததால், அவர்களின் விவகாரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்த பின் விடுவிக்கப்பட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 195 பேர் விளக்கமறியலில் உள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹானா மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post