மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் கைது - குற்றவாளியின் பெயரும் வெளியிடப்பட்டது!

மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் கைது - குற்றவாளியின் பெயரும் வெளியிடப்பட்டது!

மாவனல்லை - ஹிங்குல பிரதேசத்தில் கடந்த 28ம் திகதி இரவு புத்தர் சிலையொன்றுக்கு சேதமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மாவனல்லை காவல் துறையினரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.


$ads={2}

கேகாலை - ஹெட்டிமுள்ளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 30 வயதுடைய பிரியந்த சம்பத் குமார என்ற மேற்படி சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவர் எனவும் சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு சென்று திரும்பி வந்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த புத்தர் சிலைக்கு சேதமேற்படுத்தியுள்ளமை தொியவந்துள்ளதாகவும் சமூக வலைகளில் பரப்ப பட்டது போல் இது அடிப்படைவாத, தீவிரவாத செயல் இல்லை எனவும் காவல்துறை ஊடகப ்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post