கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துவிட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துவிட்டது!


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு  (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்)  இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 


இது தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் கடிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் ஐயா அவர்களினால் இவ் விடயம் சமந்தமாக கையாளுமாறு என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 


இதனையடுத்து நான் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஐயா அவர்களும் இன்று (06) கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். 


அந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் முன்னமே தீர்மானித்தபடி எமது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. 


இதனை உடன் கவனித்திலெடுத்த கௌரவ பிரதமர் சுகாதார அமைச்சர் அவர்களை வரவழைத்து உடனடியாக இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சமர்ப்பிக்க வேண்டிய செயற்பாடுகளை உடன் நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். 


கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இவ் உபகரணம் இல்லாமையினால் பல வருடங்களாக தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் உரிய நேரத்திற்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம். இப் பிரச்சினை இனி முடிவுக்கு கொண்டுவரப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல.


-சாணக்கியன் எம்.பி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.