காதிமார்களை இணைப்பதற்கும் நீதி அமைச்சிற்கும் தொடர்பில்லை! -அலி சப்ரி

காதிமார்களை இணைப்பதற்கும் நீதி அமைச்சிற்கும் தொடர்பில்லை! -அலி சப்ரி

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்திற்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சிற்கும் எந்த விதமான தொடர்புமில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது. அந்த நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்காகவே காதிமார்கள் இணைக்கப்படுகின்றனர்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கும் நீதியமைச்சிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post