அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக  பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உப ஜனாதிபதியாக  கமலா ஹாரிஸும் நேற்று பதவியேற்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தானும் தனது அரசாங்கமும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Congratulations & best wishes to President @JoeBiden on assumption of office as 46th President of the #USA.
My government and I look forward to working together towards a stronger & mutually beneficial bilateral relationship.

Congratulations & best wishes to Vice President @KamalaHarris on assumption of office as Vice President of the #USA. We look forward to working together towards a strengthened bilateral relationship.

— Gotabaya Rajapaksa (@GotabayaR)

இதேநேரம், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜாந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

On behalf of the #GoSL & people of #SriLanka, I congratulate President @JoeBiden & @VP @KamalaHarris on the assumption of office. I look forward to working together with you to further strengthen the relationship between both our nations. I wish you the very best for your tenure.

— Mahinda Rajapaksa (@PresRajapaksa)

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை வாழ்த்தி தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Congratulations to President @JoeBiden and Vice President @KamalaHarris. I wish you both the very best on behalf of all Sri Lankans.

— Sajith Premadasa (@sajithpremadasa)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.