
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொவாக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் அமெரிக்க சேர விரும்புவதாக பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பௌசி உலக சுகாதார நிறுவனத்திடம் இன்று தெரிவித்துள்ளார்.
$ads={2}
இதன்படி, ஜனாதிபதி பைடன் இன்று மாலை ஒரு உத்தரவை வெளியிடுவார் என மருத்துவ ஆலோசகர் குறிப்பிட்டுள்ளாார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி, சிகிச்சை மற்றும் நோயறிதல் விநியோகம், சமமான அணுகல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பலதரப்பு முயற்சிகளை முன்னெடுக்கவும் அமெரிக்கா ஆதரவு வழங்கும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவிடம் பௌசி தெரிவித்துள்ளார்.