நாட்டில் இன்று இதுவரை காணாத அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

நாட்டில் இன்று இதுவரை காணாத அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவு!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 915 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 58,502 ஆக அதிகரித்துள்ளது.


அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 423 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.


இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 49,684 ஆக உயர்வடைந்துள்ளது.


$ads={2}


இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8,538 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 814 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 1,593,668 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post