நாடு பூராவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடு பூராவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!


வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன், நாட்டின் தென்கிழக்கு பிராந்திய வளிமண்டலத்திற்கு கீழாக ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக, அடுத்து வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்குமென அறிவிக்க்பட்டுள்ளது.


$ads={2}


மேலும், நாட்டின் ஏனைய சில மாகாணங்களில் பிற்பகல் வேளையில், 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது.


இந்நிலையில், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.


இதன்போது, குறித்த கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகவும் காணப்படும்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post