கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு! முழு விபரம்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு! முழு விபரம்!

கொரோனா அச்ச நிலைமையைக் கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் இன்று (06) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

$ads={2}

இதன்படி, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அக்கரைப்பற்று 05 கிராம சேவகர் பிரிவு, அக்கரைப்பற்று 14 கிராம சேவகர் பிரிவு மற்றும் அக்கரைப்பற்று நகர கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை 01 கிராம சேவகர் பிரிவு, ஒலுவில் 02 கிராம சேவகர் பிரிவு மற்றும் அட்டாளைச்சேனை 08 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8/1 கிராம சேவகர் பிரிவு, அக்கரைப்பற்று 8/3 கிராம சேவகர் பிரிவு மற்றும் அக்கரைப்பற்று 09 கிராம சேவகர் பிரிவு என்பனவும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரொனா தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத் தளதிபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post