மக்களே அவதானம் - நாட்டில் விசித்திரமான புதிய வகை திருட்டு!

மக்களே அவதானம் - நாட்டில் விசித்திரமான புதிய வகை திருட்டு!

நாட்டில் மற்றவர்களின் அடையாள அட்டைகளை திருடி வங்கி கணக்குகளை ஆரம்பித்து மோசடியில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நவீன சங்கீத பொருட்கள் மற்றும் நவீன முறையிலான கணனி இயந்திரங்கள் என்பன குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று இணையத்தளத்தில் விளம்பரம் செய்து,

பணமோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி நேற்று வெலிகம பகுதியில் வைத்து குறித்த மோசடியுடன் தொடர்புடைய நாத்தான்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரினால் இணையத்தில் பதிவேற்றப்பட்ட விளம்பரம் தொடர்பில், எவரேனும் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அவசியமான பொருளை அனுப்பி வைப்பதற்காக முற்பணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளதுடன் அதற்காக தமது வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை வைப்பிலிடுமாறும் பின்னர் பொருளை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெருந்தொகையான பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன் இந்த மோசடிகளுக்காக பயன்படுத்திய வங்கி கணக்குகளும் பிற நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அதற்கமைய குறித்த சந்தேகநபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்த போதும் அவரிடமிருந்து 6 அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரின் மோசடிகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் அது தொடர்பில் 071-8591753 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளரிடம் முறைப்பாடளிக்க முடியும் எனவும் அவர் குறிபிட்டார்.

மேலும் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.