இலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்!!

இலங்கை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது எம்.வி. யுரோசன் கப்பல்!!


அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு கப்பலான எம்.வி. யுரோசன் திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறை ஒன்றில் மோதி சிக்குண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கப்பம் மீட்கப்பட்டது.


எம்.வி. யுரோசன் கப்பலை நகர்த்தும் கடல் கீழ் மீட்பு முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் இன்று (24) ஈடுபட்டிருந்தனர். இதன்போது கப்பலின் கீழ் பகுதியில் ஒரு பாகம் கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டதுடன் கப்பலின் கீழ் பாகத்துக்கும் ஓரளவு சேதமும் ஏற்பட்டுள்ளதையும் இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
-ஆர்.யசி


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post