
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவிருக்கும் ஒருநாள் சர்வதேச (ODI) மற்றும் இருபதுக்கு இருபது (T20) சர்வதேச தொடர்களுக்காக வீரர்கள் பயிற்சி பெற்று வந்ததாக இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தெரிவித்துள்ளது.
$ads={2}
தொற்றுக்கு இலக்கான இரண்டு வீரர்களும் கொரோனா சிகிச்சைகளுக்காக சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்படவுள்ளதாக SLC தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளான கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பினை பேணிய பிற வீரர்களை அடையாளம் காண சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
குழுக்களாக பயிற்சி நடத்தப்பட்டதால், சகல வீரர்களும் கொரோனா தொற்றுக்கு இலக்கான கிரிக்கெட் வீரர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவில்லை என்று SLC தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.