தமது அண்டைய நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா தீர்மானம்!

தமது அண்டைய நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா தீர்மானம்!


தமது அயல்நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையினை இன்னும் சில வாரங்களில் இந்தியா ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


இதனடிப்படையில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் தமது அயல்நாடுகளுக்கான தடுப்பூசிகளை கப்பல் மூலம் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக இந்திய அரசாங்கத்தை  மேற்கொள்காட்டி 'தி டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வௌியிட்டுள்ளது.


$ads={2}


இதன் முதற்கட்டமாக இலங்கை, மாலைதீவு, மொரிஸியஸ், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் நேபாளம், பூட்டான், மியன்மார், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலமாக கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.


முதற்கட்டமாக வழங்கப்படும் தடுப்பூசிகள் நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் பின்னர் அவற்றை தயாரிக்கும் இந்திய நிறுவனங்களினூடாக குறித்த நாடுகள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post