மரண தண்டனை கைதி துமிந்த சில்வா ஏழைகளின் சேவகன்; அவரை இனியும் கைதியாக கருத முடியாது! -ஆனந்த தேரர்

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா ஏழைகளின் சேவகன்; அவரை இனியும் கைதியாக கருத முடியாது! -ஆனந்த தேரர்வெலிக்கடை சிறையில் மரண தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஏழைகளுக்கு பெரும் சேவையைச் செய்த ஒரு மனிதர் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவரை இனியும் ஒரு கைதியாக கருத முடியாது என்றும் அவரை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

$ads={2}

இந்த விடயத்தில் அரசாங்கம் மற்றும் சிறைத்துறையும் கவனம் செலுத்தும் என அவர் நம்புவதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த நல்லாட்சியின் காலப்பகுதியில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை ஆராய்ந்து அதற்கு தீர்வை வழங்கும் என தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும், அதற்கேற்ப துமிந்த சில்வாவுக்கு நியாயமான தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post