கொரோனா தொற்று; சிரேஷ்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று; சிரேஷ்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் உயிரிழப்பு!


சிரேஷ்ட அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான லாரி கிங் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சிடார்ஸ்-சினாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று (23) காலை தனது 87ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.


பீபோடி விருது பெற்ற ஒளிபரப்பாளரான லாரி கிங் அமெரிக்காவின் பிரபலங்கள், ஜனாதிபதிகள் மற்றும் பிற செய்தித் தயாரிப்பாளர்களை அரை நூற்றாண்டு வாழ்க்கையில் நேர்காணல் செய்தவர்களில் ஒருவர் ஆவார்.


லாரி கிங் அண்மைய தசாப்தங்களில் மாரடைப்பு மற்றும் நீரிழிவு மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு சிக்கல்களால் பாதிப்படைந்திருந்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post