கண்டி மாவட்ட நேற்றைய கொரோனா நிலவரம் - பாததும்பரை பிரதேசத்தில் அதிகளவில் தொற்றாளர்கள்!

கண்டி மாவட்ட நேற்றைய கொரோனா நிலவரம் - பாததும்பரை பிரதேசத்தில் அதிகளவில் தொற்றாளர்கள்!

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1891 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மொத்தமாக 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். பாததும்பரை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்  


பாததும்பரை - 25

கலகெதர  - 2

கங்கவட்டகொரலே - 2

ஹரிஸ்பத்துவ - 1

குண்டசாலை - 3

கண்டி மாநகர சபை - 3

பஸ்பகேகொரலை ( நாவலபிட்டிய) - 17

உடபலாத கம்பளை - 2

உடுனுவர - 1

யடினுவர - 3

$ads={2}

கண்டி மாநகர சபை பிரதேசத்தில் 384 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


அக்குரணை பிரதேசத்தில் மொத்தமாக 340 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 168 கொரோனா தொற்றாளர்களும், கம்பளை உடபலாத பிரதேசத்தில் 144 தொற்றாளர்களும், குண்டசாலை பிரதேசத்தில் 108 தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post