நாட்டில் மார்ச் 31 முதல் அமுலாகும் புதிய தடை - அதிரடி உத்தரவு

நாட்டில் மார்ச் 31 முதல் அமுலாகும் புதிய தடை - அதிரடி உத்தரவு

வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் பிளாஸ்ட்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் சிலவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வர்த்தகம் மற்றும் கைத் தொழில்களில், விவசாய இரசாயண பொருட்களைப் பொதியிடுவதற்காக பயன்படுத்தப்படும் Polyethylene terephthalate மற்றும் PVC வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், மருந்துகள் மற்றும் உணவுகளைப் பொதியிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொலிதீன்களுக்கு தடைவிதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பலூன்கள், பந்துகள், நீரில் மிதக்கக் கூடிய அல்லது நீரில் விளையாடக் கூடிய பொருட்கள் மற்றும் நீர் விளையாட்டுத் துணைப் பொறிகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ அல்லது நோய் அறிகுறி சார்ந்த சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்ட்டிக் cotton bud என்பனவும் இதில் உள்வாங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.