27 வயது விதவையை பாலியல் துன்புறுத்தல்; பிரதேச சபை உறுப்பினர் கைது!

27 வயது விதவையை பாலியல் துன்புறுத்தல்; பிரதேச சபை உறுப்பினர் கைது!


காலி – யக்கலமுல்ல பகுதியில் 27 வயது விதவை பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யக்கலமுல்ல பிரேதேச சபை உறுப்பினர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாக்கியதெனிய , பட்டகெட்டிய பகுதியில் விதவைப் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யக்கலமுல்ல பிரதே சபையின் உறுப்பினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் என்றும் தெரிய வந்துள்ளது.


$ads={2}


நேற்று மாலை (05) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிப்புற்ற பெண் மூன்று பிள்ளைகளின் தாய் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.


இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யக்கலமுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post