20 இலட்சம் கொரோனா மரணங்கள்- புரட்டி எடுக்கும் கொரோனா

20 இலட்சம் கொரோனா மரணங்கள்- புரட்டி எடுக்கும் கொரோனா

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 ஆயிரத்து 415 பேரும், இங்கிலாந்தில் 1 ஆயிரத்து 280 பேரும், பிரேசிலில் 1 ஆயிரத்து 131 பேரும், ஜெர்மனியில் 1 ஆயிரத்து 40 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.


$ads={2}

இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 437 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 683 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 6 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 16 ஆயிரத்து 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 4,01,469
பிரேசில் - 2,08,291
இந்தியா - 1,51,918
மெக்சிகோ - 1,37,916
இங்கிலாந்து - 87,295
இத்தாலி - 81,325
பிரான்ஸ் - 69,949
ரஷியா - 64,495

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post