நேற்று (12) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் - மாவட்ட ரீதியில் முழுத் தொகுப்பு!

நேற்று (12) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் - மாவட்ட ரீதியில் முழுத் தொகுப்பு!

நேற்று (12) இலங்கையில் புதிதாக 588 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

அவர்களுள் நால்வர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை பிரஜைகளாவர்.

ஏனைய 584 பேரில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று (13) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 49537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 42,621 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


$ads={2}

6,675 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு – 13, ஹங்வெல்லை, மாத்தளை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் (12) நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

இதனை அடுத்து, இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 80 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6,606 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மாலைதீவு, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 197 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post