இன்றைய இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்வையிட 10 மாதங்களுக்கு முன்பாக இலங்கை வந்த இங்கிலாந்து பிரஜை!

இன்றைய இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்வையிட 10 மாதங்களுக்கு முன்பாக இலங்கை வந்த இங்கிலாந்து பிரஜை!


இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்வையிட 10 மாதங்கள் இலங்கையில் தங்கிய இங்கிலாந்து பிரஜை காலி கோட்டையின் மீதேறி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இங்கிலாந்து பிரஜையான ரொபட் லுவிஸ்ஸை வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.


$ads={2}


பொது மக்கள் காலி கோட்டையின் மீதேறி கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்டு வந்தமையால், அனைவரையும் அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகரான ரொபட் லுவிஸ், இலங்கை – இங்கிலாந்து போட்டிகளை பார்வையிடுவதற்காக சுமார் 10 மாதங்கள் இலங்கையில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணி இலங்கைக்கு வருகைத் தந்த விமானத்திலேயே, இங்கிலாந்து பிரஜையான ரொபட் லுவிஸ் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளார்.

இலங்கையில் கொவிட் பரவல் அதிகரித்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளை இடைநடுவில் நிறுத்திய இங்கிலாந்து அணி, நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

அன்று முதல் இன்று வரை இங்கிலாந்து நோக்கி செல்ல முடியாது இங்கிலாந்து பிரஜையான ரொபட் லுவிஸ் இலங்கையில் தங்கியுள்ளார்.

குறிப்பாக இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளை பார்வையிடும் நோக்கிலேயே அவர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இக்கால கட்டத்தில் இலங்கையில் பணி புரிந்தும் வந்துள்ளார். 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post