மஹர சிறைச்சாலை சூட்டுச் சம்பவம்; 03 கைதிகளை அடக்கம் செய்ய அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹர சிறைச்சாலை சூட்டுச் சம்பவம்; 03 கைதிகளை அடக்கம் செய்ய அனுமதி!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலகத்தின் போது உயிரிழந்த கைதிகளில் எஞ்சிய 03 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்ய, வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (08) அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, மரணமடைந்த கைதிகள் 11 பேரும் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணமடைந்துள்ளதாக, பிரேதப் பரிசோதனை அறிக்கைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

$ads={2}

மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற கலகத்தின்போது, 11 கைதிகள் மரணமடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனா காரணமாக அவர்களது உடல்களை தகனம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், உடல்களை எரித்து அழிப்பதன் மூலம் மஹர சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்து, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த சடலங்களின் பிரேதப் பரிசோதனையை விரைவாக நிறைவு செய்ய ஐவரடங்கிய விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது,

இதன்போது, குறித்த கைதிகளில் 08 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தலா 04 பேர் எனும் அடிப்படையில், இரு கட்டங்களாக 08 கைதிகளினதும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கையளிக்கப்பட்டு, அவை தகனம் செய்யப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து எஞ்சிய 03 கைதிகளினதும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கையளிக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களது உடல்களை அடக்கம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.