நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணி தாயொருவரும் காயமடைந்துள்ளார்.
மொரட்டுவை -எகொட உயன- புதிய காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்திலேயே இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணி பெண்ணொருவர் பலத்த காயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விபத்தில் 7 வயது சிறுமியும் 1 வயதுடைய குழந்தையொன்றுமே பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மேலதிக சிகிச்சைக்காக, பாணந்துறை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

$ads={2}