
வவுனியா மாவட்ட மக்களே இந்த அரசின் கொரோனாவினால் இறந்த முஸ்லீம் ஜனாஸாக்களை எரிப்பதை வண்மையாக கண்டிப்பதற்காக இந்த அமைதியான வெள்ளை துணி கட்டும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (26) காலை 9 மணியளவில் வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலையத்திற்கு முன்னால், வவுனியா பட்டாணிச்சூர், பட்டகாடு, வேப்பங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து பள்ளிவாசலும் ஒன்றினைந்து இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து மக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூரின்றி வவுனியா மன்னார் வீதியில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் இந்த அமைதியான ஆர்ப்பாட்டம். மேற்கொள்ளப்பட்டது.
$ads={2}
இதில் செல்வம் அடைக்கலநாதன் MP, நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, ரசூல் லரீப், பாயிஸ், பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் மதத்தலைவர்கள் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.






