2020 இல் இலங்ககையில் இடம்பெற்ற 41 சிறப்பம்சங்களின் தொகுப்பு!!

2020 இல் இலங்ககையில் இடம்பெற்ற 41 சிறப்பம்சங்களின் தொகுப்பு!!

ஜனவரி

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து முறையான கல்வி இல்லாத 100000 பேருக்கு வேலை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது.

இலங்கையில் முதல் கொரோணா  தொற்றாளர் இணங்ககாணப்பட்டார், சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் பி. சி. ஆர்  சோதனைக்கு பின்னர் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பெப்ரவரி

புதிய அரசாங்கத்திற்குப் பிறகு முதல் உத்தியோகபூர்வ விஜயத்தினை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதுடெல்லிக்கு மேற்கொண்டார் . இருதரப்பு பேச்சுவார்த்தை இந்தியப் பிரதமர் உடன் நடைபெற்றது.

மார்ச்

மார்ச் 11 ஆம் திகதி கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக  உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. $ads={2}
கொரோணா  தொற்றால்  பாதிக்கப்பட்ட முதல் இலங்கையரான  52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மார்ச் 20 ஆம் திகதி , கொரோணா தொற்று   பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதுமாக முடக்கப்பட்டது. படிப்படியாக, அடுத்த இரண்டு மாதங்களில் முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது, இருப்பினும் சில பகுதிகளில் பகுதி முடக்கம் தொடர்ந்தது.

ஒரு தலைமையை இலக்காகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர், பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி ,  சஜித் பிரேமதாச தலைமையில்  கீழ் வேட்பு மனுக்களை சமர்ப்பித்து  ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விழகிக் கொண்டது.நாட்டில் முதல் கொரோணா  மரணம் மார்ச் 29 ஆம் திகதி பதிவாகியது. 65 வயதான நபரே மரணமடைந்தார், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் .

ஏப்ரல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவு நாள் தொற்றுநோய் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பிரார்த்தனைகள் நடைபெற்றன.

ஏப்ரல் 8 ஆம் திகதி , வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ. 200 ஐ எட்டியது. 


ஏப்ரல் 22 ஆம் திகதி , கடற்படை கொத்தணியில் முதல் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர் இணங்காணப்பட்டார் 

நாடளாவிய முடக்கத்தின் போது பிக்மீ மார்க்கட் (PickMe Market) தொடங்கப்பட்டது. PickMe Market மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை  முடக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கியதுடன், நாட்டில் சிக்கித் தவித்த 4000+ சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்திற்குக் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள்  மேற்கொண்டது. 


மே

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (சி.டபிள்யூ.சி) தலைவர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீரென உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார்.

ஜூன்

மார்ச் 2 இல் பாராளுமன்றத்தை கலைக்கும்  ஜனாதிபதி பிரகடனத்தின் செல்லுபடியை சவால் செய்த எட்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உச்சநீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பில் தள்ளுபடி செய்தது மற்றும் மனுதாரர்கள் தொடர மறுத்துவிட்டனர்.

லங்கா சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன, நுகேகொடையில் அமைந்துள்ள மைக்ரோ நிதி நிறுவனத்திற்கு வெளியே பகல் நேரத்தில் அடித்து கொல்லப்பட்டார்.

$ads={2}
ஜூலை 

93 வயதில் சிபில் வெத்தசிங்க, சிரேஷ்ட எழுத்தாளர்  காலமானார்.
முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்ட வழக்கில் ஆதாரங்களை மறைத்து மோசடி செய்ததாக குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் எஸ்.எஸ்.பி ஷானி  அபேசேகர கொழும்பு குற்றப்பிரிவினாரால் (சி.சி.டி) கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 5 ஆம் திகதி   நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன (எஸ்.எல்.பி.பி) பதிவு செய்தது.


சஜித் பிரேமதாச தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியானது. ஐக்கிய தேசிய கட்சி மோசமான தேர்தல் தோல்வியை எதிர்கொண்டது மற்றும் பாராளுமன்றத்தில் ஒரே  ஒரு தேசிய பட்டியல் இடத்தை மட்டுமே பெற முடிந்தது.

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தனது 42 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இடத்தைப் பெறத் தவறிவிட்டார்.


மஹேல ஜயவர்தன தலைமையிலான விளையாட்டு கொள்கை விஷயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும், தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ புதிய உறுப்பினர்களை நியமித்தார்.50,000 பட்டதாரிகள் மற்றும் ரூ.100,000 குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வேலைவாய்ப்பு பணிகளை மீண்டும் தொடங்க அரசு முடிவெடுத்தது.

செப்டம்பர்

பாரியளவில்  கடல் சுற்றுச்சூழல் பேரழிவாக இருந்த, இலங்கையின் கிழக்குக் கடலில் கிரேக்கத்திற்கு சொந்தமான கப்பல் எம்டி நியூ டயமண்டில் தீ விபத்து ஏற்பட்டது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்கா) நிதியளிக்கும் லைட் ரெயில் டிரான்ஸிட் (Light Rail Transit System)  திட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

எல்.ஆர்.டி திட்டத்தினால் எதிர்பார்க்கத்தக்க முடிவுகளை அடைய முடியவில்லை என்பதைக் கவனித்ததை அடுத்து இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அமைச்சரவை தெரிவித்தது.


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம பகுதி வரை கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களது முதல் மெய்நிகர் (Virtual) இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்தினர்.

கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.


சிரேஷ்ட நடிகர் டென்னிசன் கூரே காலமானார்

அக்டோபர்
$ads={1}
கொரோணா வைரசின்  இரண்டாவது அலை ஆரம்பமானது. மிணுவன்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி கொரோணா தொற்றுக்கு இலக்கானார். 
பேலியகொடை  மீன் சந்தையில் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது நாட்டின் மிகப்பெரிய கோவிட் கொத்தணி உருவானது. சந்தை மூடப்பட்டது மற்றும் மக்கள் சந்தைக்குச் சென்ற பகுதிகள் சீரற்ற பி.சி.ஆர் சோதனைகளின் அடிப்படையில் பிரதேசங்கள்  முடக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் 6 நாட்கள் தலைமறைவாகிய பின்னர் கைது செய்யப்பட்டார்.


20 ஆவது சீர்திருத்தம்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் 156 வாக்குகள் ஆதரவாகவும், 65 க்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் சீன வெளியுறவு அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பணியக உறுப்பினருமான யாங் ஜீச்சி தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனக் குழு கொழும்புக்கு வந்தது.


அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ நாட்டிற்கு வந்தார். ஜனாதிபதி கோட்டாபய   ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். திரு. பாம்பியோ, 2019 ல் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்களில் ஒன்றான கொச்சிகடை  புனித அந்தோணி தேவாலயத்தையும் பார்வையிட்டார்.

நவம்பர்

வில்பத்து இற்கு அருகிலுள்ள கல்லாறு  பகுதியை அகற்றுவது சட்டவிரோதமானது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு தனது சொந்த செலவில் அந்த பகுதியை மீண்டும் காடாக மாற்றியமைக்குமாறு உத்தரவிட்டது

கொரோனா வைரஸ் தொடர்பான  வன்முறைக் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மகர சிறைச்சாலையின் 11 கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


டிசம்பர்

புறவி  சூறாவளி காரணமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.

மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் இலங்கைக்கு அளித்த 480 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தை திரும்பப் பெற்றது. 

2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் மூன்றில்  இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 151 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 54 பேர் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்ததாலும் பட்ஜெட் திட்டம் 97 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.உச்ச நீதிமன்ற வளாகத்தின் கழிவு  இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

LPL 2020 போட்டி தொடரில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் கிண்ணத்தினை சுவீகரித்தது.

தமிழாக்கம் யாழ் நியூசிக்காக இமாஸ் இஸ்மத் 
நன்றி NewsWireகருத்து தெரிவிக்க..

Previous Post Next Post