கொவிட் -19 கொரோனா தொற்று காரணமாக மரணிக் கும் நபர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள நிய மிக்கப்பட்ட நிபுணர் குழுவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு புவியியலாளர்களை நியமித்துள்ளது.
$ads={2}
கொவிட்- 19 கொரோனா தொற்றால் மரணிப்போர்களின் உடலை அடக்கம் செய்தால் நிலத்தடி நீருக்கு ஏற்படக் கூடிய நிலை குறித்து விளக்குவது அவர்களின் பொறுப்பு என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி வித்தார்.
இந்த நோக்கத்திற்காகச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணிபுரியும் இரு புவியியலாளர்களை நியமிக்க அமைச் சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங் கவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.