கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் அண்மையில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு நீதி அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்த அனைவரினதும் சடலங்களும் 24 மணி நேரத்திற்குள் தகனம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.