எதிர்க்கட்சியை அரசு கொரோனாவில் இருந்து பாதுகாக்க விரும்பவில்லை! -முஜிபுர் ரஹ்மான்

எதிர்க்கட்சியை அரசு கொரோனாவில் இருந்து பாதுகாக்க விரும்பவில்லை! -முஜிபுர் ரஹ்மான்

முஜிபுர் ரஹ்மான்

கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டார தனது கொரோனா வைரஸ் மருந்தினை எதிர்கட்சியினருக்கு வழங்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட மருந்து போத்தல்கள் அரசாங்க உறுப்பினர்களிற்கு மாத்திரம் வழங்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


எதிர்கட்சி உறுப்பினர்களை கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்ககூடாது என அரசாங்கம் கருதக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் அடுத்த வருடம் ஜனவரி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இல்லாததன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரசிலிருந்து தப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post