சர்வதேச தரத்திற்கு அமைவான கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்; கொரோனா தொற்று ஒரு தடையாக அமைய இடமளிக்க வேண்டாம்! ஜனாதிபதி

சர்வதேச தரத்திற்கு அமைவான கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்; கொரோனா தொற்று ஒரு தடையாக அமைய இடமளிக்க வேண்டாம்! ஜனாதிபதி


முன்பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரையிலான கல்வியை மேம்படுத்துத்துவதற்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த கொரோனா தொற்று ஒரு தடையாக அமைய இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சுக்கள் அடைய எதிர்பார்த்துள்ள இலக்குகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

$ads={2}

நாட்டின் எதிர்கால சந்ததியினரை பயனுள்ள குடிமக்களாக மாற்ற அவர்கள் புதிய அறிவு, திறன்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றால் மேம்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனை மையப்படுத்தி அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த கொரோனா தொற்று ஒரு தடையாக அமைய இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், முன்பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரையில் சர்வதேச தரத்திற்கு அமைவான கல்வி முறைமையை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post