
பௌத்த பிக்குகளினால் நேற்றைய தினம் (28) ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசாங்கத்தின் திட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யக் கூடாது எனக் கோரி இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பௌத்த பிக்குகளும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தவர்கள் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
$ads={2}
உலகில் சுமார் 200 நாடுகள் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் பலர் கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதில் பிரச்சினைகள் ஏற்படாது என அறிவித்துள்ள நிலையில் அரசாங்கம் ஏதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இனவாதத்தை தூண்டி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இனவாதத்தைக் கொண்டே தனது இயலாமையை மூடி மறைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் வீதியில் இறங்கி போராடியவர்கள் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் வீதியில் இறங்கியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.