ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தம்!

ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் மேற்கொண்ட வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி நீதிமன்ற கட்டளையால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கல்முனையில் ஆரம்பமான இந்த நடைபவனி, கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்றை குறித்த தந்தை மற்றும் மகனால் கையளிக்கப்பட்டு நடைபாதை ஆரம்பமானது.


$ads={2}

இவ்வாறு கல்முனை பகுதியில் இருந்து அக்கரைப்பற்றினை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளை, கல்முனை நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கமைய நிறுத்தப்பட்டுள்ளது.

அதாவது கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டளைசேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்க ஆயத்தங்கள் இருந்தும் கல்முனை நகரமண்டபத்துடன் இந்த நடை பவனி நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்முனை பொலிஸாரால் நிறுத்தப்பட்டது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பொலிஸாருடன் கலந்துரையாடி சட்டத்தரணியின் வாகனத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு அவர்களை அழைத்து வந்தார்.

ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டி மகஜரை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல்.எம்.றிக்காசிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.