உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் மூவருக்கு கொரோனா உறுதி!

உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் மூவருக்கு கொரோனா உறுதி!


இலங்கைக்கு வருகை தந்த மூன்று உக்ரேனியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் கூடிய விஷேட விமானமொன்று கடந்த 28 ஆம் திகதி மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்திருந்தது.


$ads={2}

ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் நேற்றைய தினமும் (29) இரண்டாவது கட்டமாக 204 உக்ரேன் நாட்டு பயணிகள் இலங்கையை வந்தடைந்தனர்.

இந்த நிலையில், குறித்த சுற்றுலா பயணிகள் 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொற்று காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளது.
$ads={1}கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post