பாழடைந்து சேவையிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இன்று பயணிகள் போக்குவரத்துக்காக மீண்டும் சேர்க்கப்பட்டன.
இப்பேருந்துகள் நாடு முழுவதும் கிராமப்புற வீதிகளில் பயணிகள் போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
$ads={2}
இடிந்து விழுந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக பயணிகள் போக்குவரத்திற்கான பேருந்துகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.