கொழும்பில் தொடர்மாடிகளில் தனிமைபடுத்தப்பட்டிருப்பவர்களை விடுவிக்க தீர்மானம் !

கொழும்பில் தொடர்மாடிகளில் தனிமைபடுத்தப்பட்டிருப்பவர்களை விடுவிக்க தீர்மானம் !

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர் மாடிகளில் உள்ள மக்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (10) காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


$ads={2}

எதிர்வரும் நாட்களில் தொடர்மாடிகளில் உள்ள வீடுகளில் பிசிஆர் அல்லது துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்கள் வௌியில் செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் சில பரிசோதனைக்குகளை அதிகரிக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post