
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடைய காரணம் இணக்க அரசியல் வெளிப்பாடு என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று(26) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
$ads={2}
எமது உரிமைகளை சலுகைகளாக கேட்பதை நிறுத்துங்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளை கொண்ட 40 ஆயிரம் தமிழ் மக்கள் பல வருடங்களாக அரசியலுக்கு அப்பால் அதிகாரிகளை நம்பி ஏமாறியுள்ளனர்.
ஆகையினால் எம்முடன் இணைந்து வாழ விரும்பினால் விட்டுக்கொடுக்க வேண்டும். தமிழர்களின் உரிமைகளை பறிப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க கூடாது. சட்டம் நீதி என்பது ஒன்றாக இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது தமிழர்களின் உரிமைகளை பறிப்பதற்காகவே முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர் என்றார்.