தப்பியோடிய கொரொனா நோயாளி கண்டுபிடிப்பு!

தப்பியோடிய கொரொனா நோயாளி கண்டுபிடிப்பு!

வெலிசர சுவாச நோய்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய கொரோனா தொற்றாளரின் மருதானை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (15) மாலை குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

மருதானை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் காசநோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக கடந்த தினம் வெலிசர சுவாச நோய்க்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மருதானை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post