கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெளிநாட்டு தேரர் ஒருவரின் சடலம் மீட்பு; காலியில் சம்பவம்!

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெளிநாட்டு தேரர் ஒருவரின் சடலம் மீட்பு; காலியில் சம்பவம்!


காலி – ரத்கம களப்பு பகுதியிலிருந்து நெதர்லாந்து தேரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 60 வயதான நெதர்லாந்தின் ஜீவரத்ன தேரர் எனும் அறியப்படும் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கடந்த 03 நாட்களுக்கு முன்னர் இந்த தேரர் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார் அவ்வாறான பின்னணியிலேயே நேற்று (08) இரவு சடலம் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.


$ads={2}


வெளிநாட்டிலிருந்து வருகை தந்து காலி – ரத்கம பகுதியிலுள்ள தபோவனம் ஒன்றில் மத போதனையில் ஈடுபட்ட குறித்த தேரரின் மரணம் தொடர்பில் மர்மம் துலக்க விசேட விசாரணைகள் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கை,கால்கள் கட்டப்பட்டு தலையில் கல் ஒன்று முடிச்சிடப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்ட நெதர்லாந்து தேரரின் சடலமே களப்பிலிருந்து சடலம் மீட்கப்பட்டது.


-எம்.எப்.எம்.பஸீர்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post