எம்மதத்தினதும் உரிமையை முடக்க வேண்டிய தேவை அரசிடம் இல்லை; எதிர்க்கட்சி இதை வைத்து இலாபம் தேடுகிறார்கள்!

எம்மதத்தினதும் உரிமையை முடக்க வேண்டிய தேவை அரசிடம் இல்லை; எதிர்க்கட்சி இதை வைத்து இலாபம் தேடுகிறார்கள்!


கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என சுகாதார தரப்பினர் தெரிவித்தால் அதனை செயற்படுத்த பின்வாங்கமாட்டோம் என ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் தேசிய மருத்துவ மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.


கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


$ads={2}


வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடல் தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனை பயன்படுத்தி எதிர்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.


உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார குழு அறிவுறுத்தினால் அதனை முழுமையாக செயற்படுத்த தயாராக உள்ளோம். எந்த மதத்தினதும் உரிமைகளையும் முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post