சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தில் விசேட நடவடிக்கைகள்!

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தில் விசேட நடவடிக்கைகள்!

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு தனியார் துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்துவதில் ஏற்கனவே தனியார் துறையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப்  பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

$ads={2}

எவ்வாறாயினும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தினூடாகவே பி.சி.ஆர் பரிசோதனை நடாத்திவருவதாக சுகாதார சேவைகள் பிரதி  பணிப்பாளர்  நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post