உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்காத மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம்!

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்காத மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம்!


உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்காத மாணவர்களுக்கான அரசின் வட்டியில்லா இலகு கடன் திட்டம்


முற்குறிப்பு: இது மிக முக்கியமான பதிவு என்பதனாலும், ஏராளமான விடயங்கள் உள்ளடக்கமாக இருப்பதனாலும் மிகவும் சுருக்கமாக பதிவிடப்படுகிறது. தேவை உள்ளவர்கள் மேலதிக தகவல்களுக்காக சற்று முயற்சி செய்யவும் வேண்டும். அதற்கான இணைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


$ads={2}


- அரச பல்கலைக்கழக வாய்ப்புக் கிட்டாத அனேக மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப்பல்கலை வாய்ப்புக்களுக்கான முதலீடு அதிகம் என்பது திண்ணம்.


- அத்தகைய மாணவர்களுக்கு அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது.


- உச்ச பட்ச மூன்று தடவைகளின் கீழ் 2017, 2018, 2019 ஆம் ஆண்டு உயர்தரத்தில் தோற்றி ஒரே அமர்வில் 03 (S) சாதாரண சித்தியுடன் பொதுச்சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டுமென்பது விண்ணப்பிப்பதற்கான அடிப்படை நிபந்தனை ஆகும்.


- SLIIT, AQUINAS, NSBM, CINEC, SIBA, ICASL, SCL, HORIZON, KIU, SLTC, ESOFT, SAEGIS, ICBT, BCI, IOC போன்ற பட்டப்படிப்பு நெறிகளை வழங்கும் உயர் கல்வி நிறுவகங்களில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு நெறிகளைத் தொடர முடியும்.


- இவ் உயர் கல்வி நிறுவகங்களில் Physical Science, Biological Science, English Special Degree, Psychology, IT, ICT, Computer Networking, Software Engineering, MIS, Pharmaceuticals, Cosmetics, Acupuncture, Biomedical Science, Mobile Computing, Multimedia, Computer Science, Interior Design, Environmental Technology, Chemical Science, Civil Engineering, Automotive Engineering, Telecommunication Engineering, Mechanical Engineering, Electronics, Mechatronics, Agricultural Technology, Management, Accounting, Finance, Project Management, Logistics, Transportation, Supply Chain Management, Tourism, Banking, Hospitality Management, Marketing, Human Resources, Industrial Management, Mathematics, Digital Marketing என சமகால தொழில்துறைக்குத் தேவையான ஏராளமான பட்டப்படிப்புகளைத் தொடர முடியும்.


- உச்ச பட்சமாக Rs. 800,000 (எட்டு இலட்சம்) வட்டியற்ற கடன் (Interest free loan) பெற முடியும்.


- பட்டத்தைப் பூர்த்தி செய்த பின் ஒரு வருட சலுகைக் காலத்தின் பின்னர் 7 அல்லது 8 ஆண்டுகளில் மீளச் செலுத்த முடியும். ஒரு வருட சலுகைக் காலத்தினுள் எவ்வித கொடுப்பனவும் செலுத்தத் தேவை இல்லை.


- தேவைப்படின், உச்ச பட்சமாக Rs. 300,000 (மூன்று இலட்சம்) உதவிக் கடனும் (Stipend Loan) பெற முடியும்.


- இதற்கானஒன்லைன் மூலமான விண்ணப்பங்கள் 2020.12.21 முதல் 2021.01.31 ஏற்கப்படும். இறுதி நேரம் வரை காத்திராமல் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பியுங்கள். அதற்கான இணைப்பு https://studentloans.mohe.gov.lk/loan_application/ யில் காணப்படுகிறது.


-    மேலதிக தகவல்களை 0112879724 / 0115115203 / 0112879722 என்ற தொலைபேசி ஊடாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது https://studentloans.mohe.gov.lk/loan_application/index.php/Login_Action/download_guide_book/student_guide_book_tamil.pdf என்ற முகவரியில் காணப்படும் கையேட்டினூடாக அல்லது 2020.12.20 நாளிதள்களினூடாகப் பெற முடியும்.


மாணவர்களே, நல்ல ஒரு பட்டப்படிப்பினைப் பெற அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பாகும்.


நிதிப் பிரச்சினைகளுடன் உயர்கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் இதனை உடனே பயன்படுத்துங்கள்.


ஏனையோருக்கும் தெரியப்படுத்துங்கள்.


எப்.எச்.ஏ.ஷிப்லி,

(ஆலோசகர் - சித்தி ஹமீதா பவுண்டேஷன்)

சிரேஷ்ட விரிவுரையாளர்,

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post