அரசியல் பெயரை மாற்றிய நடிகர் ரஜினிகாந்த்!

அரசியல் பெயரை மாற்றிய நடிகர் ரஜினிகாந்த்!


நடிகர் ரஜினிகாந்தை ரஜினியார் என எதிர்காலத்தில் மக்கள் அழைப்பார்கள் என்று இயக்குநர் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.


70 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார் ரஜினி. பிரதமர் மோடியிலிருந்து பலரும் ரஜினிக்குத் தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.


இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் இயக்குநர் பிரவீன் காந்தி கூறியதாவது,


தமிழ்நாட்டின் எதிர்கால சக்தி ரஜினி. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாய் நிறைய எடப்பாடியார் என முதல்வரைக் குறிப்பிடுவார். இந்த நல்ல நாளில் இருந்து ரஜினியை, ரஜினியார் என்று அழைக்கிறேன். எம்.ஜி.ஆர். போல ரஜினியார். எதிர்காலத்தில் ரஜினியை ரஜினியார் என மக்கள் அழைக்கத்தான் போகிறார்கள். அதற்கு முன்பு நான் சொல்லிவிடுகிறேன்.


$ads={2}


சாதாரண நடிகனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டால் போதும் என்கிற சிறிய ஆசையில் தான் தமிழ் சினிமாவில் உள்ளே நுழைந்தார். அவருடைய எந்தப் படத்திலும், இப்போது வெளிவரும் படங்களிலும் ஒரு ஃபிரேமையும் அவர் வீணடித்ததில்லை. அந்த உழைப்பு தான் இந்த அளவுக்குக் கொண்டுவந்துள்ளது. பேட்ட படத்தை ஜாபர்கான்பேட்டையிலும் ரசிப்பார்கள், ஜப்பானிலும் ரசிப்பார்கள். இந்த உயரம் இறைவன் தந்தது. அதை அவர் முழுதாக நம்புகிறார்.


இலட்சக்கணக்கான ரசிகர்கள் ரஜினி சொல்வதைப் பின்பற்றுகிறார்கள். பெற்றோரை, குழந்தைகளை மதியுங்கள் என தந்தை ஸ்தானத்தில் இருந்து ஒரு நடிகர் என்பதைத் தாண்டி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவைப்படுகிறவராக அவர் மாறிவிட்டார். எப்படி வீட்டுக்கு ஒரு கதவு தேவைப்படுகிறதோ அதுபோல ரஜினியும் ஒரு வழிகாட்டியாகத் தேவைப்படுகிறார். அவர் அறிவுரைகளைக் கேட்டு வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறியவர்கள் பலர் உள்ளார்கள் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post