புதிய வகை ஐக்கிய இராச்சிய கொரோனா தொற்றுடன் இலங்கை நுழைந்த இருவர்!

புதிய வகை ஐக்கிய இராச்சிய கொரோனா தொற்றுடன் இலங்கை நுழைந்த இருவர்!

இன்று காலை 06 மணிக்கு முடிவடைந்த கடைசி 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக கண்டறியப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த ஆறு நபர்களில் இருவர் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் ஐக்கிய இராச்சியத்தில் புதிய மாறுபாட்டை காட்டி வருவதாக ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது. அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மற்றைய நோயாளிகள் மத்திய கிழக்கு மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நோயாளிகளும் கொரோனா வைரசின் புதிய மாறுபாட்டுடைய தொற்றுக்கு இலக்காகி இருப்பதாக அதிகாரிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.


$ads={2}

கடந்த வாரம் முதல் இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இங்கிலாந்து பயணிகள் இலங்கைக்குள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது.

இங்கிலாந்தில் இருந்து விமானங்களை தடை செய்வதற்கான முடிவை எடுக்கும் நேரத்தில் இலங்கையர்களை அழைத்து வருவதற்கான இலங்கை விமானம் ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்பட்டிருந்ததாக இலங்கை கோவிட் பணிக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை இங்கிலாந்தில் இருந்து வந்த விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தனி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post