இன்றைய போட்டியில், ஜப்னா ஸ்டாலியன் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா ஸ்டாலியன் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஜப்னா ஸ்டாலியன் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஜப்னா ஸ்டாலியன் அணி சார்பில் அதன் தலைவர் திஸ்ஸர பெரேரா அபாரமாக துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 68 ஓட்டங்களையும். தனஞ்ஜய டீ சில்வா 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
$ads={2}
இதேவேளை. 186 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது .
இந்நிலையில், ஜப்னா ஸ்டாலியன் அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று. புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.